. கணினி அறிவியல் மாணவர்களுக்காக

Search This Blog

Thursday, May 20, 2010

இலவச புரோகிராம்கள் நான்கு

இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது. இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.


1. பயர்பாக்ஸை வேகப்படுத்த:
யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும் , சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனை SpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக் கொண்டு வருகிறது. பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் குக்கிகளை வழக்கத்தைக் காட்டிலும் விரைவாகச் செயல்படுத்துகிறது. இதனை http://www.crystalidea.com/speedyfox என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.


2. சிஸ்டத்திற்குள் சிஸ்டம்:
ஒரே கம்ப்யூட்டரில் இரண்டு சிஸ்டங்கள் இருந்தால், பூட் செய்கையில் எந்த சிஸ்டத்தில் நுழைய என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு, நம் ஆப்ஷனைக் கேட்கும் ஒரு விண்டோ தரப்படும். ஐ ரிபூட் (iReboot) என்ற புரோகிராம் விண்டோஸ் தொடங்கிய பின்னரும் அதனுள்ளாக இன்னொரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதற்கான ஆப்ஷனைத் தருகிறது. அப்படி ஆப்ஷன் தரும் சிஸ்டம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் உள்ளது. விண்டோஸ் இயங்கிய பின் இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. அதனைக் கிளிக் செய்தால் நமக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தேர்வு செய்திட ஆப்ஷன்ஸ் தருகிறது. இதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், தேர்ந் தெடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் நுழைந்து கொள்கிறது. இதைப் போன்ற ஒரு வசதி, விண்டோஸ் 7 உட்பட, எந்த விண்டோஸ் சிஸ்டத்திலும் தரப்படவில்லை. இதனைப் பெற http://neosmart .net/dl.php?id=11 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


3. விண்டோஸ் நேரம்:
கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? விண்டோஸ் ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்குத் தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம். "Work", "School", "Fun" எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கம்ப்யூட்டரிலும் இன்டர்நெட்டிலும் என்ன செய்கிறார்கள் என்பதைக் காட்டும். இந்த புரோகிராமினை http://code.google .com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.


4: ஈஸி பைல் லாக்கர் (Easy File Locker):


எத்தனையோ வாசகர்கள் அவர்களின் கடிதங்களில் பைல்களை எப்படி மற்றவர்கள் அணுகாமல் பாதுகாப்பது என்று கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நாமும் அவர்களுக்குப் பலமுறை பல வழிகளைச் சொல்லி வந்திருக்கிறோம். இந்த புரோகிராம் சரியாகத் தன் பெயருக்கேற்றபடியான வேலைகளைச் செய்கிறது. இந்த புரோகிராம் பைல்களை லாக் செய்வது மட்டுமின்றி, மற்றவர் கண்களிலிருந்து மறைக்கவும் செய்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை எந்த பாஸ்வேர்டும் இன்றி இது செயல்படுத்துகிறது. அந்தக் கால விண்டோஸ் 95 தொகுப்பில் செயல்படுவது போல இது செயல்படுகிறது. கருப்பு பின்னணியில் வெள்ளை பட்டன்களுடனும், பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் வழியில் கொண்டு வரும் வசதிகளுடனும் செயல்படுகிறது. இதனைப் பெற http://www.xoslab.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

Friday, May 14, 2010

டிப்ஸ்.... டிப்ஸ்.....

டாகிள் கீ:
டாகிள் கீ என்று தனியாக ஒரு கீ இல்லை. கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock) போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன்பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lock கீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இவ்வாறு செயல்படுத்தப்படும் கீகளையே டாகிள் கீ (Toggle Key) என அழைக்கிறோம்.

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்
பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள் பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


பல வேளைகளில் நாம் பிரவுசர்களில் அதற்கு முன் பார்த்த தளத்தைப் பார்க்க பின் நோக்கிச் செல்லும் பேக் பட்டனை அழுத்துவோம். இதன் அருகே கீழ் நோக்கியவாறு ஓர் அம்புக் குறியினைப் பார்க்கலாம். இதனை அழுத்தினால் நீங்கள் முன்பு பார்த்த தளங்கள் 5 முதல் 10 வரை கிடைக்கும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பும் தளத்தைப் பார்க்கலாம். சில தளங்கள் அடுத்தடுத்து கிளிக் செய்து உங்களை முன் நோக்கிப் போகச் சொல்லும். அது போன்ற தளங்களில் நீங்கள் பிரவுஸ் செய்கையில், முதன் முதலில் பார்த்த தளத்திற்குச் செல்ல வீணாகப் பலமுறை பேக் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. இந்த அம்புக் குறியை அழுத்தி, தளமுகவரிகளைக் கண்டு கிளிக் செய்து பெறலாம்.


நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினைத் தவறுதலாக மூடிவிட்டீர்களா? அதன் முகவரி தெரியவில்லையா? கவலை வேண்டாம். கண்ட்ரோல்+ஷிப்ட்+ட்டி (Ctrl+Shft+T) அழுத்துங் கள். இதனை மீண்டும் மீண்டும் அழுத்தினால் அதற்கு முன் மூடிய தளங்கள் வரிசையாகத் திறக்கப்படும். பேக் ஸ்பேஸ் மற்றும் ஆல்ட் + இடது அம்புக் குறி ஒரு தளத்தைப் பின்னோக்கிக் காட்டும். ஆல்ட் + வலது அம்புக் குறி அழுத்தினால் ஒரு தளம் முன்னோக்கிக் காட்டும்.
எப்11 அழுத்தினால் அப்போதைய இணைய தளம் முழுப் பக்கத்திலும் காட்டப்படும். மீண்டும் அழுத்தினால் முந்தைய நிலைக்குத் திரும்பும்.
எஸ்கேப் கீ அழுத்தினால் இணைய தளம் டவுண்லோட் ஆவது நிற்கும்.
Ctrl+ ‘+’ அல்லது ‘’ அழுத்தினால், இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் எழுத்தின் அளவு கூடும், குறையும்.
.Com என்று முடியும் தளத்தின் முகவரியை முழுமையாக்க தளத்தின் பெயரை மட்டும் டைப் செய்து Ctrl +Enter அழுத்தினால் போதும்.
.net என முடியும் தளத்திற்கு Shift + Enterஅழுத்த வேண்டும்.
.org என்பதில் முடியும் தளப் பெயராக இருந்தால், பெயரை மட்டும் டைப் செய்து Ctrl + Shift + Enter அழுத்தவும்.
ஏதேனும் விண்டோவில் உங்களுடைய தகவல்களை நிரப்பி இருக்கிறீர்கள். இவை அனைத்தையும் நீக்கிட Ctrl + Shift + Del அழுத்தவும்.
Ctrl + D அழுத்தினால் அப்போதைய தளத்திற்கு புக்மார்க் ஏற்படுத்தப்படும்.
Ctrl + I அழுத்தினால் அப்போதைய புக்மார்க்குகள் காட்டப்படும்.
Ctrl + J அழுத்தினால் டவுண்லோட் விண்டோ காட்டப்படும்.
Ctrl + N கீகளுக்கு புதிய பிரவுசர் விண்டோ திறக்கப்படும்.
Ctrl + P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்கும்.
Ctrl + T புதிய டேப் ஒன்றைத் திறக்கும்.
Ctrl + F4 அல்லது Ctrl + W அப்போது தேர்ந்தெடுத்த டேப்பினை மூடும்.
திறக்கப்பட்ட டேப்கள் வழியே செல்ல Ctrl + Tab பயன்படுத்த லாம்.
ஸ்பேஸ் பார் (Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம். ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift + Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம்.
இணைய தளம் ஒன்றில் ஏதேனும் லிங்க் இருந்தால் அதனை புதிய விண்டோவில் திறக்க ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த லிங்க் மீது கிளிக் செய்திடவும். அல்லது அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், புதிய டேப், புதிய விண்டோவில் அதனைத் திறக்கும்படி செய்திடலாம்.

விண்டோஸ் 7-ல் கூடுதல் வசதியும் பாதுகாப்பும்
புத்தம் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் என்ன கூடுதல் வசதிகள் தர முடியும் என்று இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணலாம். விண்டோஸ் 7 செட்டிங்ஸ் அமைப்பினைச் சீர்படுத்தி, அதன் செயல்பாட்டினை மேம்படுத்த பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இலவச புரோகிராம்களே. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். நீங்கள் இன்னும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறவில்லை என்றாலும், இவற்றைக் குறித்து வைத்துக் கொள்வது, அல்லது டவுண்லோட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (http://www. crosoft.com/Security_Essentials)விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு முன் வந்தவை போல, இந்த புதிய சிஸ்டத்திலும் மால்வேர், வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் வசதிகள் எதுவும் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் தரப்படவில்லை. பயர்வால் ஒன்று இணைத்துத் தரப்பட்டிருந்தாலும், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான நடவடிக்கையை அதனால் எடுக்க முடியாது. எனவே தான் நாம் கட்டணம் செலுத்தி மெக் அபி அல்லது சைமாண்டெக் போன்ற வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதே வேலையை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் தனியாக செக்யூரிட்ட் எசன்ஷியல்ஸ் என்ற புரோகிராமினைத் தருகிறது. வீடுகளில் வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களுக்கு இது மிகச் சரியான பாதுகாப்பினைத் தருகிறது. இதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனை டவுண்ட்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அல்லது எனக்கு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இலவசமாகப் பெற்று பயன்படுத்தலாம்.
2. நினைட் (Ninite): எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 7 க்கு மாறுபவர்கள், கிளீன் இன்ஸ்டால் செய்திட வேண்டியுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த அனைத்து புரோகிராம்களையும் மீண்டும் ஒரு முறை,புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டும். இது ஒரு அநாவசியமான நேரம் எடுக்கும் வேலை ஆகும். இதற்குப் பதிலாக அனைத்து இலவச புரோகிராம் களையும் தானாக ஒரே வேலையாக இன்ஸ்டால் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இதனைத் தான் நினைட் தளம் மேற்கொள்கிறது. முதலில் http://www.ninite.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களைத் தேர்வு செய்திடுங்கள் (எ.கா. பயர்பாக்ஸ், ஸ்கைப், ஐட்யூன்ஸ் போல) அடுத்து நினைட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின் அனைத்து புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித கூடுதல் வேலையும் இல்லாமல் இன்ஸ்டால் செய்யப்படும். நினைட் பெர்சனல் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கும்.
3.விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) விஸ்டாவினால் நாம் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப் பட்டதால், அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் அநாவசியத்திற்குப் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் லைவ் போட்டோ காலரி. இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர். இதனை http://download. live.com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.
4. விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் (windows easy transfer) : நீங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாறுபவர்களாக இருந்தால், விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் என்னும் மைக்ரோசாப்ட் இலவசமாகத் தரும் புரோகிராமினை, நிச்சயம் இயக்கிப் பார்க்க வேண்டும். இந்த புரோகிராம் http://windows.microsoft.com/enus/windows7/products/ features/windowseasytransfer என்ற முகவரியில் கிடைக்கிறது. பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு உதவிடுகிறது. இதில் ஒரு பைல் எக்ஸ்புளோரர் தரப்படுகிறது. நாம் காப்பி செய்திடக் கொடுக்கும் பைல், அதன் டைரக்டரியிலிருந்து எடுக்கப்பட முடியாமல், மாற்றப்பட முடியாமல் இருந்தால், உடனே இந்த எக்ஸ்புளோரர் முடங்காது. அதற்குப் பதிலாக பைல் மாற்றத்தை முடித்து, இறுதியில் எந்த பைலை ஏன் மாற்ற முடியவில்லை என்ற அறிக்கையைத் தரும். இந்த புரோகிராம் பைல்களைக் காப்பி செய்வதில்லை. ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொன்றுக்கு, அவற்றை இணைக்கும் கேபிள் வழியே மாற்றுகிறது. கம்ப்யூட்டர் இணைக்கப்படவில்லை என்றால் பைல்களை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் டிரைவிற்கு மாற்றலாம். இந்த புரோகிராமை இயக்க கேபிள் அல்லது மேலே சொல்லப்பட்ட இந்த டிரைவ்கள் தேவை.
5. அல்ட்டிமேட் விண்டோஸ் ட்வீக்கர் வி2 (Ultimate Windows Tweaker v2) விண்டோஸ் 7 தொகுப்பின் இயக்கத்தினை, உங்கள் விருப்பப்படி அமைக்க வேண்டுமா? யூசர் இன்டர்பேஸ், நெட்வொர்க், செக்யூரிட்டி, சிஸ்டம் செட்டிங்ஸ் போன்றவை உங்கள் விருப்பத்தின்படி இயங்க வேண்டுமா! இந்த தொகுப்பைப் பயன்படுத்துங்கள். விஸ்டாவிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வழிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் பல செட்டிங்குகளை அமைக்கலாம். விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களில் அல்ட்டிமேட் எடிஷன் பயன்படுத்துபவர்களுக்கு இது கூடுதல் வசதிகளைத் தருகிறது. இதனை http://www.thewindowsclub.com /ultimatewindowstweakerv2atweakuiforwindows 7vista#more1957 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
6.விண்ஸிப் 14 (WinZip): விண்டோஸ் தொகுப்பிலேயே பைல்களைச் சுருக்கி விரிக்கும் வசதி இருக்கையில் விண்ஸிப் எதற்கு என்று நீங்கள் எண்ணலாம். இதே இதழில் விண்ஸிப் பதிப்பு 14 குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையைப் படிக்கவும். விண்டோஸ் இயக்கம் தரும் வசதிகளுடன் கூடுதல் வசதிகளை இந்த பதிப்பு தருகிறது. எனவே இதனையும் கூடுதலாகப் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். கிடைக்கும் தள முகவரி www.winzip.com

7. என்ஹேன்ஸ் மை 7 (EnhanceMySeven) விண்டோஸ் விஸ்டா மற்றும் எக்ஸ்பியைக் காட்டிலும் விண்டோஸ் 7 பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்து நிர்வகித்தல் என்பது சற்று சிரமமான காரியம் என்பது போகப் போகத் தெரியும். இந்த வகையில் உதவுவதற்கு என என்ஹேன்ஸ் மை 7 தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. http://www.seriousbit.com/tweak_ windows_7/ என்ற தளத்தில் இது கிடைக்கிறது. இதன் மூலம் எந்த பைல்கள் ஸ்டார்ட் அப் போல்டரில் இருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம். ஹார்ட் டிரைவ் செயல்படும் விதம், வெப்ப நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ரிஜிஸ்ட்ரியில் மாற்றங்களை ஏற்படுத்தும் வேலையையும் மேற்கொள்ளலாம்.
8. இமேஸ் ரீசைஸர் (Image Resizer Powertoy Clone): விண்டோஸ் 7 இயக்கத்தில் படங்களின் அளவை மாற்றி அமைக்க வேண்டுமா! இந்த இமேஜ் ரீசைஸர் புரோகிராம் இதற்கு உதவி வேலையை எளிதாக்குகிறது. இதனை இன்ஸ்டால் செய்த பின், பட பைல் ஒன்றின் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், அதில் நான்குவித அளவுகளுக்கான (small (640 by 480); medium (800 by 600); large (1024 by 768); மற்றும் handheld PC (240 by 320)) மெனு கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த அளவில் படம் கிடைக்கும். இவை தவிர நீங்கள் செட் செய்திடும் அளவிலும் படங்களை அமைக்கலாம். இந்த புரோகிராமினை http://imageresizer.codeplex.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
9. சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools): விண்டோஸ் 7 சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம், தோற்றம், மெமரி பயன்பாடு, சிஸ்டம் கிளீன், பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் அழகாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. இதனை ttp://systerac.com/seven/overview.htm என்ற முகவரி யில் பெறலாம்.
10. விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் (Windows7 Upgrade Advisor): உங்கள் சிஸ்டத்தை விஸ்டா அல்லது எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு அப்கிரேட் செய்திட திட்டமா? அப்படியானால் விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் புரோகிராம் இயக்கிப் பார்க்காமல் செய்திட வேண்டாம். மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் (http://www.microsoft.com/ windows/windows7/get/upgradeadvisor.aspx) இந்த புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பிரிவுகளையும் சோதனை செய்து அவை அனைத்தும் விண்டோஸ் 7 சிஸ்டம் ஏற்றுக் கொள்ள போதுமானவையா என்று காட்டுகிறது.

ஆப்பிள் நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் வெளியாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஸ்நோ லியோபர்ட் வெளியிட்டது. கடந்த மூன்று மாதங்களாக இந்த சிஸ்டம் செயல்பாட்டில் உள்ளது. விண்டோஸ் 7 வெளியாகி இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்நோ லியோபர்ட் சிஸ்டத்தைக் காட்டிலும் அதிக அளவில் விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுகிறது.
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டில் இன்னும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஸ்டங்கள் தான் முன்னிலையில் உள்ளன. இது கொண்டிருக்கும் பங்கு 92.52% ஆகும். மேக் சிஸ்டம் 5.27%. லினக்ஸ் 0.96%. மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் 1.25% பங்கைக் கொண்டிருக்கின்றன.
விண்டோஸ் சிஸ்டங்களைப் பொறுத்தவரை விண்டோஸ் 7 2.15%, விஸ்டா 18.83%, எக்ஸ்பி 70.48% என்ற அளவில் இயங்குகின்றன.

கம்ப்யூட்டருக்குப் புதியவர்களா!

எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்புடன் இணைந்து தரப்படும் எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தும் புரோகிராம் ஆகும். நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன. எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >> All Programs > Accessories > Paint எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதான் எனப்பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரியவேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம். இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக் காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா?


Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப்படாதீர்கள். செய்து பாருங்கள்.
படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப் படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.
ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம். மீசை வைக்கலாம். இது போல வேடிக்கையான செயல்களையும் சீரியஸான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open ன்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீதுகிளிக் செய்து இங்கு திறக்கலாம். ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன்படுத்தலாம். Image மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி படங்களைச் சுழட்டலாம்.
உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா? சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP, .JPEG, அல்லது GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.
சாதனையும் வேதனையும் !

முதலில் சாதனைக்கு பாராட்டு!

சதுரங்க விளையாட்டின் முப்பரிமாணங்களிலும் (League, Knock Out and Match) உலக சாம்பியன் பட்டம் வென்று, அவரை உலக சாம்பியன் என்று அங்கீகரிக்க மறுத்து வந்த ஒரு பிரிவினரை வாயடைக்கச் செய்த, நமது சதுரங்க சக்கரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த இப்போது "மிகக் கடுமையான போட்டியாளராக" கருதப் படும் டோபலோவ்'வை வீழ்த்தி, தனது உலக சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னே எரிமலை குழம்பின் காரணமாக ஐரோப்பியாவில் விமான போக்குவரத்து தடைபட்டது விஸ்வநாதன் ஆனந்தின் தயார் நிலையை வெகுவாக பாதித்தது. இந்த போட்டியின் முதலாவது ஆட்டத்திலேயே ஆனந்த் தோல்வி அடைந்தது அவரது தயாரின்மையை வெகுவாக வெளிப்படுத்தியது. இருந்தாலும் சாம்பியன்கள் எளிதில் வீழ்வதில்லை என்பதற்கு உதாரணமாக சிறப்பாக மீண்டு வந்த அவர் போட்டியின் எட்டாவது ஆட்டம் வரை முன்னிலையே வகித்து வந்தார். டோபலோவ் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்றும் ஆனந்தின் வயது மற்றும் உடல் வலு-குறைவு ஆகியவை கடைசி கட்டத்தில் அவருக்கு எதிராக அமையும் என்று சில சதுரங்க முன்னாள் வீரர்கள் கணித்ததற்கு மாறாக வெற்றியாளர்களுக்கு எதுவும் தடையில்லை என்பதை ஆனந்த் மீண்டும் ஒரு முறை நிருபித்துக் காட்டினார்.

அவருக்கு நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்வோம்.

இப்போது வேதனைக்கு ஆறுதல்!

20-20 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சூப்பர் லீக் போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்து செமி பைனல் வாய்ப்பையும் இழந்து திரும்பி இருக்கிறது டோனி தலைமையிலான இந்திய அணி. தொடர்ந்து பல நாட்கள் உள்ளூரின் சாதகமான ஆடுகளங்களில் சாதாரண பந்து வீச்சாளர்களுடன் மோதியது, இந்திய பேட்ஸ்மென்களின் தயார்நிலையை வெகுவாக பாதித்தது. கோடை வெயில் வீரர்களின் உடல் தகுதியை ஒருபக்கம் பாதிக்க, இன்னொரு பக்கம் இரவு நேர கேளிக்கைகள் அவர்களின் மனரீதியான தயார்நிலையை பாதித்திருக்கின்றன. குறிப்பாக முக்கியமான உலகக் கோப்பைக்கு இடையேயும் கூட "கேளிக்கைகளுக்காக" நான்கு நாட்கள் இந்திய வீரர்கள் முழுமையாக செலவழித்தது அவர்கள் "ஐபிஎல் ஜுரத்திலிருந்து" முழுமையாக வெளிவரவில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை அவர்களை கடவுளர்களாக சித்தரித்த நமது கிரிக்கெட் விமர்சகர்கள் இப்போது அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகவும் நன்றாகவே பொருந்தும். அடுத்து வரும் ஜிம்பாப்வே தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் போதும். இந்திய அணியினர் மீண்டும் கடவுளர்கள் ஆக்கப் படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எனவே இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெரிய அளவில் கவலைப் பட வேண்டியதில்லை.

அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்களிலேயே பெருவாரியான வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

Tuesday, May 11, 2010

  • தமிழ் இணையதளங்கள் :
http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/

கணிணியில் செருகிய/நிறுவிய அனைத்து யுஎஸ்பி கருவிகளை பார்வையிட

>> Apr 14, 2010

உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி (Usb device )கருவியை முதல் தடவை செருகும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் கோப்புகள்(Device driver) நிறுவப்பட்டு பிறகு அந்த கருவி கண்டறியப்படும்.

நீங்கள் விரும்பினால் கணிணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம்.
வேண்டுமெனில் குறிப்பிட்ட யுஎஸ்பி கருவியை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை நீங்கள் நீக்கம் செய்யப்பட்ட கருவியை செருகினால் அது புதிய கருவியாய் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டு கண்டறியப்படும்.

Usb Deview என்ற இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் தற்போது செருகப்பட்டுள்ள மற்றும் ஏற்கனவே பயன்படுத்திய யுஎஸ்பி கருவிகளின் பெயர், விவரம், வகை, முதன்முதல் செருகிய தேதி, தயாரிப்பாளர் எண், தயாரிப்பு எண்( Product serial )போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.நன்றி!

TAMIL TOP ADDRESS

1:-http://www.honeytamilonline.co.cc/
கூகுள் குரோம் அப்டேட் பைல் வடிவில் வைரஸ்!!!

குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து மறைமுகமாக அனுப்பத் தொடங்கி உள்ளனர்.

கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும். இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம்.

அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.

இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது. குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]' அல்லது '[xx].search.yahoo.com' என டைப் செய்தாலும், உடனே 89.149.xxx.xxx என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம்.

எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும். உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.
இணைய செய்தி
ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்

இந்து மதத்தின் படி இது கலியுகம்.ஆனால் இண்டெர்நெட்டைப்பொருத்தவரை நடப்பு காலத்தை இமெயில் யுகம் ,டிவிட்டர் யுகம், வலைப்பின்னல் அல்லது ஃபேஸ்புக் யுகம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

ஃபேஸ்புக் யுகம் என்று சொல்வதற்கான காரணங்களை எளிதாகவே புரிந்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் இமெயில் முகவரி இருப்பது எப்படி இன்றியமையாததாக கருதப்பட்டதோ அதே போல இன்று வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக்கில் ஒருவருக்கென சொந்தமாக பக்கம் இருப்பது இயல்பானதாக கருதப்படுகிறது.

ஃபேஸ்புக் பக்கம் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்வது சுலபமாக இருப்பதோடு நணபர்களைப்பற்ரி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஃபேஸ்புக்கில் நுழைவதே போதுமானதாக இருக்கிறது.

ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒருவ‌ர‌து ஜாத‌க‌த்தையே தெரிந்து கொண்டுவிட‌ முடியும். யாரையாவ‌து தொட‌ர்பு கொள்ள‌ வேண்டும் என்றால் இப்போது தொலைபேசி எண்ணையோ ஏன் இமெயில் முக‌வ‌ரியையோ கூட‌ ப‌ல‌ரும் தேடுவ‌தில்லை.ஃபேஸ்புக் ப‌க்க‌ம் இருக்கிற‌தா என்றே பார்க்கின்ற‌ன‌ர்.

இப்ப‌டி ஃபேஸ்புக் ப‌க்க‌ம் மூல‌ம் பெல்ஜிய‌ம் ம‌னித‌ர் ஒருவ‌ருக்கு ஆச்ச‌ர்ய‌மான‌ அனுப‌வ‌ம் நிக‌ந்துள்ள‌து.33 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் அவர் அனுப்பிய‌ செய்திக்கான‌ ப‌தில் ஃபேஸ்புக் மூல‌ம் கிடைத்திருக்கிற‌து. அவ‌ரே கூட‌ அந்த‌ செய்தியை ம‌ற‌ந்து விட்ட‌ நிலையில் இத்த‌னை ஆண்டுக‌ளுக்கு பின் யாரோ ஒரு பெண்ம‌ணி ப‌தில் அளித்து விய‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.

அந்த‌ ஆச்ச‌ர்ய‌த்தின் பின்னே இருப்ப‌தும் ஒரு புதிரான‌ ச‌ங்க‌தி தான். பாட்டிலில் ஒரு செய்தி ப‌ற்றி நீங்கள் கேள்விப்ப‌ட்டிருக்க‌லாம். புறா காலில் செய்தியை அனுப்பி வைப்ப‌து முத‌ல் த‌பால் த‌ந்தி ,இமெயில் என‌ ம‌னித‌குல‌ம் எத்த‌னையோ த்க‌வ‌ல் தொட‌ர்பு வ‌ழிக‌ளை கையாண்டு இருக்கிற‌து.

இவ‌ற்றுக்கு ந‌டுவே கொஞ்ச‌ம் விநோத‌மான‌ த‌க‌வ‌ல் தொட‌ர்பும் புழ‌க்க‌த்தில் இருக்கிற‌து.இத‌னை ப‌ர‌வ‌லான‌து என்றோ பிர‌ப‌ல‌மாது என்றோ சொல்ல‌ முடியாது..ஆனால் சுவார‌ஸ்ய‌மான‌து. பாட்டிலில் செய்தியை எழுதி க‌ட‌லில் வீசி எறிந்து விட்டு எப்போதாவ‌து யாராவ‌து அத‌னை பார்த்து தொட‌ர்பு கொள்கின்ற‌ன‌ரா என்று காத்திருப்ப‌து தான் இந்த‌ த‌க‌வ‌ல் தொடர்பு முறை. இந்த‌ செய்தி பார்க்க‌ப்ப‌டும் என்ப‌த‌ற்கோ பார்க்க‌ப்ப‌ட்டாலும் ப‌தில் வ‌ரும் என்ப‌த‌ற்கோ எந்த‌ உத்திர‌வாத‌மும் இல்லை.

உண்மையில் இந்த‌ நிச்ச‌ய‌ம‌ற்ற‌ த‌ன‌மையே இதில் உள்ள‌ சுவார‌ஸ்ய‌ம்.அந்த‌ வ‌கையில் இது ஒரு புதிர் க‌ல‌ந்த‌ விளையாட்டு. இந்த‌ ப‌ழ‌க்க‌த்தின் ரிஷி மூல‌ம் ந‌தி மூல‌ம் ப‌ற்றி தெரிய‌வில்லை.இத்னை அடிப்ப‌டையாக‌ கொண்டு அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ந்துள்ள‌ன‌. கிட்ட‌த்த‌ட்ட‌ 33 ஆன்டுக‌ளுக்கு முன் ஆலிவ‌ர் வான்டேவ‌ல்லே என்னும் வாலிப‌ருக்கு இங்கிலாந்தில் சுற்றுலா சென்றிருந்த‌ போது திடிரென‌ இப்ப‌டி பாட்டிலில் செய்தி அனுப்ப‌ வேண்டும் என‌ தோன்றியிருக்கிற‌து.

அப்போது ம்வ‌ருக்கு 14 வ‌ய‌து.ப‌ட‌கில் சென்று கொண்டிருந்த‌ அவ‌ர் அந்த‌ நேர‌த்தின் இந்துத‌லில் ஒரு காகிதத்தை கிழித்து அதில் த‌ன்னைப்ப‌ற்றியும் தான‌ மேற்கொள்ளும் ப‌ய‌ண‌த்தையும் குறிப்பிட்டு ஒரு செய்தி எழுதி அத‌னை பாட்டிலில் அடைத்து த‌ண்ணீரில் வீசிவிட்டார். யாராவ‌து அதனை பார்த்து க‌டித‌ம் எழுதுகின்ற‌ன‌ரா பார்க்க‌லாம் என்ப‌து அவ‌ர‌து எண்ண‌ம்.ப‌தில் வ‌ந்தால் ப‌ய‌ண‌த்தின் நினைவுச்சின்ன‌மாக‌ வைத்துக்கொள்ள‌லாம் என்று அவ‌ர் நினைத்திருக்க‌லாம்.வ‌ராவிட்டாலும் இந்த‌ எதிர்பார்ப்பே ஒரு சுவார்ஸ்ய‌ம் என‌ நினைத்திருக்க‌லாம்.

எது எப்ப‌டியோ இந்த‌ பாட்டில் க‌ட‌லில் த‌ண்ணீரில் மூழ்கிய‌து 1977 ல்.அத‌ன் பிற‌கு வாலிப‌ர் ஆலிவ‌ர் இந்த‌ ச‌ம்ப‌வத்தை ம‌ற‌ந்தே விட்டார்.
இப்ப‌டி ஒரு செய்தி அனுப்ப‌ய‌தை அவ‌ர் மீண்டும் நினைத்து பார்த்திருக்க‌ கூட‌ வாய்ப்பில்லை. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த‌ ஒரு பெண்ம‌ணி அவ‌ர‌து ஃபேஸ்புக‌ ப‌க்க‌த்தில் தொட‌ர்பு கொண்டு பாட்டில் செய்தியை நினைவு ப‌டுத்திய‌ போது அவ‌ர் விய‌ந்தே போய்விட்டார். டோர்செட் ந‌க‌ரில் வ‌சிக்கும் லார‌னே யீட்ஸ் என்னும் பெண்ம‌ணி அந்த‌ பாட்டிலை ச‌மீப‌த்தில் கண்டெடுத்திருக்கிறார்.உட‌னே அத‌ற்கு ப‌தில் அளிக்க‌ வேண்டும் என்ற‌ உந்துத‌ல் அவ‌ருக்கு ஏற்ப‌ட்டுள்ள‌து.

அதில் இருந்த‌ தபால் முக‌வ‌ரியை பெரிதாக‌ எடுத்துக்கொள்ள‌த யீட்ஸ் ஆலிவ‌ரின் பெய‌ரை இண்டெர்நெட்டில் தேடி அவ‌ருடைய‌ ஃபேஸ்புக் ப‌க்க‌த்தை க‌ண்டுபிடித்து தொட‌ர்பு கொண்டிருக்கிறார். முத‌லில் ஆலிவ‌ருக்கு எதுவுமே புரிய‌வில்லை.த‌ன்க்கும் அத‌ற்கும் ச‌ம்ப‌த‌மில்லை என‌ கூறிவிட்டார். பிற‌கு தான் 14 வ‌ய‌தில் தான் மேற்கொண்ட‌ புதிரான‌ முய‌ற்சி நினைவுக்கு வ‌ந்த‌து. இப்போது இருவ‌ரும் ஃபேஸ்புக்கில் ந‌ண்ப‌ர்க‌ளாகிவிட்ட‌ன‌ர்.

33 ஆண்டுக‌ளுக்கு முன் எப்போதாவ‌து க‌டிதம் மூல‌ம் ப‌தில் வ‌ந்தால் வ‌ரும் என‌ க‌ட‌லில் க‌ல‌ந்த‌ செய்திக்கு இப்போது ஃபேஸ்புக் வாயிலாக‌ ப‌தில் வ‌ந்து இர‌ண்டு பேர் வ‌லை பின்ன‌ல் ந‌ண்ப‌ர்க‌ளாகி இருப்ப‌தை என்னெவென்று சொல்வ‌து.