. கணினி அறிவியல் மாணவர்களுக்காக

Search This Blog

Tuesday, May 11, 2010

கணிணியில் செருகிய/நிறுவிய அனைத்து யுஎஸ்பி கருவிகளை பார்வையிட

>> Apr 14, 2010

உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி (Usb device )கருவியை முதல் தடவை செருகும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் கோப்புகள்(Device driver) நிறுவப்பட்டு பிறகு அந்த கருவி கண்டறியப்படும்.

நீங்கள் விரும்பினால் கணிணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம்.
வேண்டுமெனில் குறிப்பிட்ட யுஎஸ்பி கருவியை பட்டியலில் இருந்து நீக்கலாம். அடுத்த முறை நீங்கள் நீக்கம் செய்யப்பட்ட கருவியை செருகினால் அது புதிய கருவியாய் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டு கண்டறியப்படும்.

Usb Deview என்ற இந்த மென்பொருளின் மூலம் கணிணியில் தற்போது செருகப்பட்டுள்ள மற்றும் ஏற்கனவே பயன்படுத்திய யுஎஸ்பி கருவிகளின் பெயர், விவரம், வகை, முதன்முதல் செருகிய தேதி, தயாரிப்பாளர் எண், தயாரிப்பு எண்( Product serial )போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.நன்றி!

No comments:

Post a Comment